Tuesday, February 28, 2012

ஆபத்தானவர் யார்?




பாம்பை மிகக்கொடியதென்று கூறுகிறோம். ஆனால் எந்தப் பாம்பும் எந்த மனிதரையும் தேடிச்சென்று கடித்ததில்லை. நாம் தூங்கும்போது கூட. 

ஆனால் அவை எங்கேனும் மறைந்து வாழ்ந்தால்கூடத் தேடிச்சென்று அடித்துக் கொல்கிறோம். 

பாம்பு நம்மைத் தேடிவந்து கொல்வதாக இருந்தால் ஒரு மனிதன் உயிர்வாழ முடியுமா? ஆனாலும் அவை அப்படிச் செய்வது இல்லை.

ஆனாலும் சொல்கிறோம் சொல்கிறோம் பாம்பு கொடியதென்று! 

ஆனாலும் சொல்கிறோம் மற்ற உயிரினங்ளைவிட மனிதன் மேலானவன் என்று! 

இதுதான் மானிட நீதியா?

உண்மையில் ஆபத்தானவர் யார்?

No comments:

Post a Comment